இலங்கையிலும் அதிசயம் - குஞ்சு ஒன்றை பெற்றெடுத்தது கோழி! (படம் இணைப்பு)


கோழி ஒன்று குஞ்சை ஈன்றெடுத்த சம்பவம் அதிசயம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது. அதாவது கோழி முட்டை போடுவதும், அதை அடைகாத்துக் குஞ்சு பொரிப்பதும்தான் வழமை.


ஆனால் இலங்கையின் வெலிமட, கெந்திரிமுல்ல, நெடுங்கமுவ என்ற இடத்தில், ஈ.எம்.ரஞ்சித் என்பவர் வளர்த்து வந்த ஆறு கோழிகளில் ஒன்றே குஞ்சு ஒன்றை ஈன்று விட்டு இறந்து போயுள்ளது.இந்தக் கோழி இதுவரை முட்டையிடாமல் இருந்து வந்ததாகவும், நேற்று குஞ்சு ஒன்றை ஈன்ற பின்னர் இறந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தாய்க்கோழி இறந்த போதும், அது ஈன்ற குஞ்சு நலமாக உள்ளது.இத்தகையதொரு நிகழ்வை தாம் கேள்விப்பட்டதில்லை என்று கூறியுள்ள வெலிமட பிரதேச தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி பி.ஆர்.யாப்பா, கோழியே குஞ்சை ஈன்றதை உறுதி செய்துள்ளார்.கோழியின் உடலை பரிசோதனை செய்ததாகவும், அந்தக் கோழியின் உடலுக்குள் முட்டை அடைகாக்கப்பட்டு, குஞ்சு பொரித்த நிலையில் அது வெளிவந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.




Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb