அகதிகளாய் அடைக்கலம் தந்த தொப்பிள் கொடி உறவுகளே! மீண்டும் எம்மை ஒரு கணம் திரும்பிப் பாரீர்... (வீடியோ இணைப்பு)


தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் அகதிகள், தங்களை அங்கிருந்து விடுவிக்க கோரி தொடர்ந்து நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு இதுவரை எவ்வித பதில் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இச்சிறையில் இலங்கையைச் சேர்ந்த 32 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியது, சந்தேகப்படும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இராமேஸ்வரம், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் பிடிபட்ட இவர்கள் கடந்த சில மாதங்களாக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.




இவர்கள் தங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்றுமாறு கோரி, கடந்த 3 மாதங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தனர். அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் 45 நாட்களுக்குள் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர்.



இதையடுத்து, உண்ணாவிரதத்தை கைவிட்ட இலங்கைக் கைதிகள், 45 நாட்கள் கடந்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கடந்த 15 ந்திகதி முதல் மீண்டும் 10 பேர் உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள்.


இன்று 5ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரதத்தில் இலங்கைக் கைதிகளான பிஷ்பி, சதீஷ்குமார் ஆகியோர் மயக்கம் அடைந்தனர். நாங்கள் நிரபராதிகள், எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என சிறையில் உள்ள இலங்கைக் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb