பச்சைக் குத்துவது என்பது பழமையான நாகரீகங்களிலிருந்தே புறப்பட்டுவிட்டது. கி.மு 4000 முதல் 5000ம் ஆண்டுகளுக்கு முன் ஒட்சி பள்ளத்தாக்கில் வாழ்ந்த ஓட்சி பனிமனிதர்கள் தமது கை,கால்களில் பச்சைக்குத்திக்கொண்டதை வரலாறு ஞாபகப்படுத்துகிறது.ஜப்பானிய ஐனு இனக்குழுவினர் முதல், இந்திய, இலங்கை உள்ளிட்ட மக்களிடமும் பழங்காலத்திலிருந்து பச்சை குத்தும் வழக்கம் இருந்து வருகிறது. மேற்குலகத்தினரை தவிர்த்து ஒரு சில நாடுகளில் இதுவொரு கலாச்சார மோகமாக அல்லது நாகரீகமற்ற அடையள சின்னங்களாக கூட நோக்கப்படுகிறது. ஏனெனில் தொழில்ரீதியான பச்சை குத்தல்களினால் அத்தகையக விளைவே ஏற்படுகிறது என்பது அவர்கள் வாதம்.எனினும் சமூக, சமய நம்பிக்கைகளின் தீவிரத்தை அல்லது வீர தீரத்தை காட்டுவதற்காகவும், நோய்களிலிருந்து பாதுகப்பதற்கான அக்குபஞ்சர் போன்ற மருத்துவ நோக்கிலான பச்சை குத்தல்களும் நிச்சயமாக பண்பான சமூகத்தில் தவறாக பார்க்கமுடியாதவை. ஆனால் இப்போது இளைஞர்கள் மத்தியில் 'Tattoo' என்கிற பேரில் யூத்புல் கலாச்சாரமாகி விட்டது.
பச்சை குத்துதலின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?
'நீங்க நினைக்கறது சரிதான். அன்றைய பச்சைக் குத்தலும், இன்றைய 'Tattoo' போடுவதும் ஒன்றுதான். என்ன அப்போது நுணுக்கமான முறை பச்சைக் குத்துவது என்பதை ஒரு சிலரிடம்தான் எதிர்பார்க்க முடியும். அதாவது ரொம்ப வன்முறையாக பச்சைக் குத்துவது போல இருக்கும். ஆனால் அது Tatoo வாக மாறியபின், இதற்கென தனியாகப் படித்து பல்வேறு நுணுக்கங்களைக் கையாண்டு போடுவதால் Tattoo போடுவது வன்முறையாகத் தெரியாது.
இதற்கும் படிக்க வேண்டுமா என்ன?
இதைப் பார்த்தவுடனே எல்லாம் செய்துவிட முடியாது. இந்த கோர்ஸ் படிக்க எது பெஸ்ட் இடம்னு தேடித்தான் தாய்லாந்தில் போய் படிச்சோம். என்னதான் கம்ப்யூட்டரில் வரைந்து ஸ்டிக்கரில் ஒட்டி அதுக்குமேல மெஷின் பொருத்தி டிசைன் செய்தாலும், அவுட்புட் நல்லாயிருக்கனும்னா, அது நம்ம சொந்த டேலன்ட்லதான் முடியும். உதாரணத்துக்கு ஓம் போட்ட பிள்ளையார் வேணும்பாங்க. ஓம் ஒழுங்கா வரலை இல்லை பிள்ளையார் ஒழுங்கா வரலைன்னா வேஸ்ட். போட்டுகிட்டவங்களுக்கும், போட்டுவிட்டவங்களுக்கும் திருப்தி இருக்காது.
யாரெல்லாம் விரும்பிப் போட்டுக் கொள்கிறார்கள்?
நிறைய காலேஜ் பொண்ணுங்க, பையனுங்க தான் விரும்பிப் போட்டுக்கறாங்க. ஃபிராங்கா சொல்ல போனா, சிலப் பொண்ணுங்க தன்னுடைய பாய் பிரென்ட் பேரையும், சில பையனுங்க தன கேர்ள் பிரென்ட் பேரையும் போட்டுக்க விரும்புவாங்க. சிலர் தங்களுக்குப் பிடித்த சினிமா ஆர்டிஸ்ட் பெயரை போட சொல்வாங்க. பெரும்பாலும் பாசிட்டிவ் எனர்ஜிக்காக டாட்டூ குத்திக்கிறவங்க எல்லா வயதிலும் இருக்கிறார்கள்.
டாட்டூ போடும்போது வலிக்குமா, நீண்ட நாளைக்கு இருக்குமா?
ஸ்கின்னில் மெல்லிதான மரத்துப் போகிற மாதிரியான உணர்வுதான் இருக்கும். ஸ்கின் முதல் லேயரிலேயே கவனமாகப் போடணும். கொஞ்சம் ஆழம் போனாலும் வலிக்கும். அதோடு டாட்டூவிலும் முடிச்சுகள் விழுந்து விடும். நடுவில் போடப்படும் கலர்தான் போகுமேத் தவிர டாட்டூ கடைசிவரை இருக்கும்.
டாட்டூ போட எவ்வளவு செலவாகும்?
ஒரு ரூபாய் அளவிற்கு டாட்டூ போட ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என பச்சை புன்னகையுடன் கூறும் நிஷாவின் ஸ்டூடியோ தேனாம்பேட்டையில் இருக்கிறது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து






