மலேசியா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் இளம் வயது ஆண்களும், பெண்களும் திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.இதற்கு காரணம் தொழிலில் ஆர்வமும், பொருளாதார நெருக்கடியும் தான் என்று கூறப்படுகிறது. இவ்வாறு தொழிலில் மும்முரமாக ஈடுபட்டதன் காரணமாக பாம் ஷாவ் என்ற 70 வயது பெண் திருமணம் செய்யாமல் இருக்கிறார். தற்போது அவருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. லண்டன் நகரில் நடன கிளப் அழகியான அவர் தற்போது தான் முதல் தடவையாக மணமகனை தேடும் படலத்தில் இறங்கி இருக்கிறார்.தனக்கு வரப்போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் விதிமுறைகள் வகுத்துள்ளார். அதாவது மணமகன் நல்ல உயரமாக கருத்த நிறத்தில் கம்பீரமாக காட்சி தருபவராக இருக்க வேண்டுமாம்.அதுமட்டுமல்ல தான் இதுவரையில் கன்னி கழியாத பெண் என்றும் கூறுகிறார். தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு வந்ததால் இதுவரையில் திருமணத்தை பற்றி சிந்திக்கவே இல்லை என்றும், திருமணத்திற்கு முந்தைய உறவில் நாட்டம், நம்பிக்கை இல்லாததால் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்றும் அவர் விளக்கம் தருகிறார்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





