கண்களுக்கு விருந்தளித்த மலேசியாவின் டைனோசர் கண்காட்சி! (படங்கள் இணைப்பு)


மலேசியா கோலாலம்பூரில் உள்ள தேசிய அறிவியல் மையத்தில் டைனோசர்களின் கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது.Cityneon, EMS மற்றும் பெரிசியான் புக்கிட் கியராவில் உள்ள தேசிய அறிவியல் மையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் "The Dinosaurs Live!" எனும் பெயரில் இக்கண்காட்சி நடைபெற்று வருகிறது.


சுமார் 250 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்து அழிந்துபோன உயிரினமாக டைனோசர்களை கூறுகின்றனர் விஞ்ஞானிகள். இன்று வரை அதனைப்பற்றி ஆராய்ச்சிகள் தொடர்கிற, நிலையில் உயர்தர மெக்கட்ரோனிக்ஸ் அனிமேஷன் தொழிழ்நுட்பத்தில் நிஜமாகவே உயிருடன் இருப்பது போல் டைனோசர்களை உருவப்படுத்தி அதனை இங்கு காட்சிக்கு வைத்துள்ளனர். பார்வையாளர்கள் பலவகையான டைனோசர்கள் பற்றிய வரலாறு அதன் செயற்பாடுகள், குணாதியங்கள் போன்ற பல விடயங்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.


குறிப்பாக சிறார்களை கவரும் விதத்தில் இக் கண்காட்சியில் பல வேடிக்கை விளையாட்டுக்களையும் ஒழுங்கு செய்துள்ளனர். குறைந்த நுழைவுக்கட்டணத்துடன் வருகிற ஜுலை மாதம் வரை இக் கண்காட்சி நடைபெருகிறது.








Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb