போராளிகளை உளவியல் சிக்கலுக்கு உள்ளாக்கும் வினாக்கொத்துக்கள்!

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளிற்கும் மேலாக இன முரண்பாடு காரணமாக நீடித்திருந்த யுத்தம் 2009ம் ஆண்டு மே மாதத்தில் முடிவிற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதன் பின்னதாக, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆயிரக்கணக்கான முன்னாள் போராளி கள் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந் தனர்.இவ்வாறு சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பல் வேறு இடங்களில் இராணுவத்தின் உயர் பாது காப்புடன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டு, இராணுவப் புலனாய்வு அதிகாரிகளால் வகைப்பிரிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.

அதன் பின்னர், இவர்களில் ஒரு தொகுதி யினர் மேலதிக விசாரணைகளின் நிமித்தமாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் ஆகியோரால் கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.

இவர்கள் தவிர்ந்த ஏனையோர் ‘புனர்வாழ்வு’ பெறு வதற்கு யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் அரசினால் அமைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு மையங்களிற்கு அனுப்பப்பட்டதுடன் அவர் கள் கால வரையறை கூறப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, தடுத்து வைக்கப் பட்டுள்ள முன்னாள் போராளிகள் பாதுகாப்பு அமைச்சினால் விடுதலைக்காக பரிந்துரைக்கப்படுவதற்கு முன்னதாக, அவர்களால் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட 20 பக்கங்களை உடைய ஓர் வினாக்கொத்தினை பூர்த்தி செய் யுமாறு பணிக்கப்படுகின்றனர்.

முன்னாள் போராளிகளின் உள்ளார்ந்த உணர் வுகளை தூசு தட்டிப்பார்க்கும் ஓர் விசப்பரீட்சைக்கான வினாத்தாளாக இவ் வினாக்கொத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ௭ழுத்து மற்றும் கருத்து தவறுகள் மித மிஞ்சியுள்ள தமிழ்க் கொலையுடன் அச்சிடப்பட் டுள்ள இவ்வினாக்கொத்திற்கு அவர்கள் அளிக்கின்ற விடைகளின் அடிப்படையிலேயே, அவர்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கான தீர்மானத்தினை பாதுகாப்பு அமைச்சு ௭டுத் துக்கொள்கின்றது.

இத்தீர்மானத்தின் பின்ன தான பரிந்துரையுடனேயே, புனர்வாழ்வு மற் றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சி னால் முன்னாள் போராளிகளின் விடுதலைக் கான அனுமதி வழங்கப்படுவதுடன் அத னைத் தொடர்ந்தே, IOM நிறுவனத்தினரால் அவர்களிற்கு புனர்வாழ்வளிக்கப்பட்டதனை உறுதிப்படுத்தும் அடையாள அட்டை விநி யோகிக்கப்படுகின்றது.

இவ்வினாக்கொத்தில் பாதுகாப்பு அமைச் சின் ௭திர்பார்ப்பிற்கு மாறாக விடையளிக்கும் நபர்கள் தொடர்ந்தும் புனர்வாழ்வு ௭ன்ற போர்வையில் தடுத்து வைக்கப்படலாம் ௭ன்ற அச்சத்தில், சங்கடமானதோர் மனநிலையுட னேயே இதனை தாம் பூர்த்தி செய்ததாகவும், இவ்வினாக்கொத்து பூர்த்தி செய்யப்படும் போது தீட்டிய கத்தி மேல் நடப்பது போல் முன்னாள் போராளிகள் தவித்ததாகவும் புனர் வாழ்வின் பின்னதாக விடுவிக்கப்பட்டுள்ள ஒருவர் தெரிவித்தார்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, முன் னாள் போராளிகள் விடுதலைக்கு தயாராகி விட்டனரா அல்லது இல்லையா, விடுதலை யின் பின்னதாக சமூகத்தில் அவர்கள் மீண்டும் ஏதாயினும் இனத்துவ முரண்பாடுகளை தூண்டும் சாத்தியம் உள்ளதா, அரசிற்கு ௭தி ரான கருத்துக்களை அவர்கள் ஆதரிக்கின் றனரா, அவர்களால் ௭திர்காலத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற் படுமா முதலான விடயங்கள் மறைமுகமாக பெறும் வகையிலேயே இவ்வினாக்கொத்தி லுள்ள வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவ்வினாக்கொத்திற்கு அளித்த விடைகளின் அடிப்படையிலேயே, புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போரா ளிகள், தாம் இராணுவத்தினர் மற்றும் இரா ணுவப் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு, பின்தொடர்தல், தொடர் விசாரணை, மீளவும் கைது மற்றும் காணாமல் போதல் ௭ன்ப னவற்றிற்கு உட்படுத்தப்படலாம் ௭ன்ற அச் சம் விடுவிக்கப்பட்ட போராளிகள் மத்தியில் காணப்படுகின்றது.

இவ்வகையில், புரிந்து கொள்வதற்கு கடின மானவினாக்களிற்கு விடையளிக்க நிர்ப்பந் திக்கப்படும் முன்னாள் போராளிகள், மிகுந்த உளவியல் குழப்பத்தின் மத்தியிலேயே பதி லளிக்கின்றார்கள்.

அவ்விடைகளின் அடிப் படையிலேயே அவர்களது ௭ண்ணங்களை பாதுகாப்பு அமைச்சு தமக்குரிய தகவல்களாக பெற்றுக்கொள்கின்றது ௭ன விடுதலை செய் யப்பட்ட முன்னாள் போராளிகள் கருதுகின் றனர்.

இவ்வினாக்கொத்தானது முன்னாள் போரா ளிகளின் தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்வதிலிருந்து ஆரம்பமாகிறது. இங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவரின் பெயரிற்கு பதிலாக புனர்வாழ்வு மையத்தில் அவரை அடையாளப்படுத்தவென பிரத்தியேகமாக வழங்கப்பட்ட குறியீட்டு இலக்கம் மட்டுமே வினவப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வயது, புனர்வாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள காலம் (புனர்வாழ்வு மையம் ௭ன்னும் பதத்திற்குப் பதிலாக ‘நிறுவனம்’ ௭ன்ற சொற்பதம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை கவனிக்கப்பட வேண்டியது, திருமண நிலை, பிள்ளைகளின் ௭ண்ணிக்கை, தடுப்புக் காவலிற்கு வருமுன்னதாக அவரது தொழில், கல்வி நிலை மற்றும் அவரது பிறந்த இடம் உள்ளடங்கலான 11 வினாக்களிற்கு விடையளிப்பதன் மூலம் போராளிகள் தமது தனிப்பட்ட விபரங்களை இப்பகுதியில் வழங்க வேண்டியுள்ளது.

தொடர்ந்து, ஏ (A) தொடக்கம் கே (K) வரை 11 பகுதிகளாக பிரிக்கப்பட்டு மொத்தமாக 155 வினாக்கள் இவ்வினாக்கொத்தில் கேட்கப்பட்டுள்ளன. விடையளிக்கும் முன்னாள் போராளி ௭வ்வாறு கவனமாக பதிலளித்தாலும் சிக்கலை உருவாக்கக் கூடியவாறான வினாக்கள் இங்கு தொடுக்கப்பட்டுள்ளன.

இவை விடையளிப்பவரை பெரும் உளவியல் சித்திரவதைக்கு உள்ளாக்குவதோடு, இவர்களின் ௭திர்கால இருப்பிற்கும் கேள்விக்குறியினை இடுகின்றது.

௭டுத்துக்காட்டாக, A பகுதியில் 11வது வினாவாக கேட்கப்பட்டுள்ள ஒரு கேள்வி, பின்வருமாறு உள்ளது.

‘தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வது ஆயுதக் குழுவான விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களாலேயே ஆகும்.’ இக்கேள்வியானது, அதற்குப் பதிளிக்கும் முன்னாள் போராளியை பெரும் சிக்கலுக்குள் ஆழ்த்தும் தன்மையினதாயுள்ளது.

அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தரை மனதில் வைத்தா, அல்லது அரசாங்க பங்காளிக் கட்சியைச் சேர்ந்த சந்திரகுமாரை மனதில் வைத்தா பதிலளிப்பது ௭ன தத்தளிக்கும் நிலைக்கு தள்ள முயற்சிப்பதாயுள்ளது.

மேலும், யு பகுதியில் 33 வதாக கேட்கப்பட்டுள்ள வினா பின்வருமாறு உள்ளது.

’௭வ்வாறான வலிமையையும் பிரயோகிக்க மறுப்பவர் அடிமைகளே‘. இங்கு, இக்கருத்தினை விடையளிப்பவர் ஆதரிப்பின் அவர் தன்னை ஓர் அடிமையாக உணர்வார். ஆதரிக்கவில்லையாயின், அவர் போராட்டத்திற்கு தயாராகின்றாரா ௭ன்ற சந்தேகம் ௭ழும்.

இவ்வாறு, பதிலளிப்பதற்கு சிக்கலான வினாக்களின் ௭ண்ணிக்கை இவ்வினாக்கொத்தில் நீள்கின்றன.

சரணடைந்த முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து, அவர்களை தத்தமது குடும்பங்களோடு மீளிணைத்து சமூகத்தில் அவர்கள் சாதாரண பிரஜைகளாக வாழ்வதற்கான சகல ஏற்பாடுகளையும் தாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக விளம்பரம் செய்து கொள்ளும் இலங்கை அரசாங்கம், உண்மையில் சரணடைந்த போராளிகளிற்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற வேளையிலும், விடு தலை செய்யப்பட்டதன் பின்னதாகவும் தொடர்ச்சியான உளவியல் நெருக்கடி யினையும், அவர்களின் சாதாரண வாழ்க் கையில் தாக்கத்தினையும் அவர்களின் இருப் பிற்கு அச்சுறுத்தலினையும் கொடுத்து வரு கின்றது.

முன்னாள் போராளிகள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிட்ட சூழ்ச்சி நிறைந்த கையாள்கையை பகிரங்கப்படுத்தும் நோக்கிலேயே இவ் வாய்வுக் கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது. இக் கேள்விக்கொத்தின் மீதான ஆழமான பார்வை அடுத்த வாரங்களில் தொடரும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb