பிறந்து 3 நாட்களான குழந்தையைக் கடத்துவதற்காக தாயைக் கொன்ற கொடூரம்! (வீடியோ, படங்கள் இணைப்பு)


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தையின் தாயை சுட்டுக் கொன்று விட்டு, அக்குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையின் கார் பார்க்கிங் இடத்திற்கு அருகே வந்த ஒரு பெண், குழந்தையின் தாயிடம் சென்று தகராறு செய்துள்ளார்.


இதன் பின் திடீரென அந்த குழந்தையின் தாயை நோக்கி சுட்டதில், அந்த இடத்திலேயே தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனையடுத்து குழந்தையை எடுத்துக் கொண்டு அந்த பெண் தப்பித்து விட்டார். தகவல் அறிந்த பொலிசார் பல இடங்களிலும் சோதனையிட்டு தேடினார்கள்.


இதனால் குழந்தையை ஒரு இடத்தில் போட்டு விட்டு அந்த பெண் தலைமறைவானார், அதன் பின் குழந்தையை மீட்ட பொலிசார் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.






Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb