ஆண்களைக் கவரும் பெண்களின் உடலமைப்பு பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?


காலம் காலமாக பெண்ணின் வடிவம் ஆண்களை தொந்தரவு செய்து கொண்டுதான் இருக்கிறது. ஒல்லியாக இருக்கும் பெண்களை சில ஆண்கள் விரும்புகின்றனர். அதே சமயம் குண்டான, கொழுக் மொழுக் என்று இருக்கும் பெண்களையும் விரும்பத்தான் செய்கின்றனர்.சினிமாவில் கூட ஒரு கட்டத்தில் குஷ்பு, ஜோதிகா பிடிக்கிறது. அப்புறம் ஒல்லி இடுப்பு சிம்ரன், திரிஷா, தமனா பக்கம் ரசிகர்கள் சாய்கின்றனர். மறுபடியும் குண்டு ஹன்சிகா பக்கம் காற்று வீசுகிறது.ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆண்களின் ரசனை மாறிக்கொண்டுதான் இருக்கிறது. பெண்ணின் கொலுசு அணிந்த கால்கள் கூட ஆண்களை கவர்ந்து இழுக்கின்றன. சங்கு கழுத்து, கூர் நாசி, அகன்ற கண்கள் என பெண்ணின் ஒவ்வொரு உறுப்புக்கும் ரசிகர் மன்றம் அமைக்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.


இப்பொழுதோ வயிறு பகுதியைவிட இடுப்பு பகுதி சற்று பருமனாக உள்ள பெண்களைத்தான் பெரும்பாலான ஆண்களுக்கு பிடிக்கும் என ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. சுவாரஸ்யமான அந்த ஆய்வு-என்ன பொண்ணுடா அவ? என்னா வடிவம்? இந்த பெண்ணை பெத்தாங்களா? இல்ல ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா? இவை எல்லாம் அழகான பெண்களைக் கண்டதும் கூட்டமாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஆண்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகள். அந்த அளவிற்கு பெண்ணின் ஒவ்வொரு உறுப்பும் ஆண்களை உறங்க விடாமல் பாடாய் படுத்துகின்றன.இதனைக் கருத்தில் கொண்டே பெண்ணின் எந்த அம்சம் பிடிக்கும் என்பது பற்றி அமெரிக்க மருத்துவ உளவியல் நிபுணர் லவினியா ராட்ரிகெஸ் ஓர் ஆய்வை மேற்கொண்டார். அப்பொழுது சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.


பெண்களின் உடல் அமைப்பைப் பொருத்தவரை வளைவாக இருக்க வேண்டும் என பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர். அதாவது, வயிறு பகுதியைவிட இடுப்பு பகுதி சற்று பருமனாக இருக்க வேண்டுமாம். உதாரணமாக, வயிறு 70 செ.மீ. அளவும், இடுப்பு 100 செ.மீ. அளவும் இருக்கலாம். இந்த அளவில் சற்று ஏற்ற இறக்கம் இருந்தாலும் பரவாயில்லை. கண் பார்வை இல்லாத ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.


“மேட் மென்” என்ற தொலைக்காட்சித் தொடர் நடிகை கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ் போல உடல் அமைப்பு இருந்தால் ஆண்களை கவரலாம். கிறிஸ்டினாவின் உடல் அமைப்பு கவர்ச்சியாக இருப்பதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறியுள்ளனர்.தங்கள் உடல் அமைப்பு ஒரே அளவாக ஒல்லியாக இருந்தால்தான் ஆண்களை கவர முடியும் என பெரும்பாலான பெண்கள் நினைக்கின்றனர். இது தவறு என்று நிரூபித்துள்ள இந்த ஆய்வு முடிவு.


பெண்ணின் உடல் அமைப்பிற்கு காரணம் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன் சுரப்பே. இது சரியான அளவாக சுரக்காத பட்சத்தில்தான் பெண்ணின் உடலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பெண்ணின் உருவத்தில் என்ன இருக்கிறது. உள்ளத்தில் இருக்கிறது அழகு என்கின்றனர் நம் ஊர் இளசுகள்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb