உலக அன்னையர்கள் அனைவருக்கும் ஐதமிழ்வெப்பின் கோடான கோடி அன்னையர் தின வாழ்த்துக்கள் உரித்தாகுகு...
கருவிலிருந்த உன்னோடு வளர்ந்தேன் - அன்னையே
அறுந்த தொப்பிள் கொடி பிரித்தது எம்மை - என்று
நான் நினைத்ததில்லை உன் பாசத்தின் முன்னே
எம்மைப் பிணைக்கும் ஒரு சக்தியில்லை...
அறுந்தது தொப்புள் கொடி மட்டுமே...
எம் பந்தக் கொடி அல்ல...
பெற்ற அன்னை தூற்ற நினைக்கும் இந்த
நவீனமான அற்ப உலகிலே...
வருடத்தில் ஒரு முறை உனைப் போற்ற
கிடைத்த இந்த அரிய பாக்கியத்தை விடுவேனா நழுவ?
ஒருக்காலும் இல்லை...
உலகோடு போற்ற இந்நாளில் இணைகின்றேன் நானும்
ஆனாலும் ஒருநாளும் மறவேன் உன் திருவடிகள் வருட...
நாம் விழ முன்னே நீ விழுவாய் எம்மைத் தாங்குவதற்கு...
இன்று ஒருநாளாவது நிம்மதியாக தூங்குவாயோ அன்னையே!
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



