
தனது நகரின் முக்கிய கட்டிடங்களை அழகுக் கலையான ஓவியங்கள் மூலம் அழகு படுத்த தொடங்கியுள்ளது மெக்சிகோ அரசு.20ம் நூற்றாண்டிலிருந்து ஓவியத்தின் ஒரு நவீன அங்கமாக பின்பற்று வரும் தெருவோர சுவரோவியங்களை இப்படி தனது கட்டிடங்களில் வரைந்திருக்கிறது மெக்ஸிகோ அரசு. மெக்சிக்கோ நகரில் பல முக்கிய கட்டிடங்களில் வரையப்பட்டுள்ள இச் சுவரோவியங்கள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன. “All City Canvas” எனும் திட்டத்தின் மூலம் உலக அளவிலிருந்தும் உள்ளூரிலும் ஓவியக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இப் பிரமாண்ட சுவரோவியங்களை உருவாக்கியுள்ளனர்.
கட்டிட உரிமையாளர்களிடம் அனுமதி பெறப்பட்டு வரையப்பட்ட இச் சுவரோவியங்கள் 6மாத காலம் வரை அழிக்கப்படாமல் இருப்பதோடு அதுவரை பாதுகாக்கப்படும் எனவும் இதன் ஒருங்கினைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து






