குழி தோண்ட கிளம்பிய புகை! கிண்ணியாவல் பதட்டம்.


கிண்ணியா, எழிலரங்கு மைதானத்திற்கு அருகிலுள்ள பிரதேச வீடொன்றிலின் நிலத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை புகை வெளியாகியுள்ளது. கழிவுப் பொருட்களைப் புதைப்பதற்காக வீட்டின் உரிமையாளர் காலை 11.00 மணியளளவில் குழி தோண்டிய போது புகை வெளியாகியுள்ளது. குறித்த வீட்டு நிலத்தின் மூன்று இடங்களிலிருந்து கடந்த 3 மணித்தியாலங்களா புகை வெளிவந்தவுள்ளமுள்ளன. நிலத்திலிருந்து தீடிரென புகை வெளியாகியமையால் குறித்த பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அச்சமடைந்த பிரதேச வாசிகள் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். 


குறித்த பிரதேசத்தை சுற்றி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலையில் கிண்ணியா வென்நீர் ஊற்று உள்ளது குறிப்பிடத்தக்க விடையம். இப் பகுதிக்கு அடியில் எரிமலைக் குழம்பு ஓடிக்கொண்டு இருக்கவேண்டும் இல்லையேல் அங்கு பொஸ்பரஸ் படிமங்கள் நிலத்துக்கு அடியில் இருக்கவேண்டும் என நம்பப்படுகிறது. இதன்காரணமாகவே இப் பிரதேச நிலப்பரப்பின் கீள் வெப்ப சூழ் நிலை நிலவுகறது.



Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb