தாம்பத்திய உறவின் வெளிப்படாத உண்மைகளும், நம்பிக்கைகளும்!


உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடியும்.


கிளர்ச்சி அடைவது என்பது செக்ஸ் அடிப்படையில் அலசிப் பார்த்தால் அது பால் உறுப்புக்களையும், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல காரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.ஆர்கஸம் எனப்படும் கிளர்ச்சி நிலைப்பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. உறவில் சரியான உச்சக்கட்டத்தை அடைய முடியாத பெண்கள் தங்களின் துணையைப் பற்றி தவறாக எண்ணக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.இது உண்மையில்லை. பெண்களுக்கு உச்சகட்ட இன்பத்தை அடைய வைக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. உறவினால் மட்டுமல்ல காதலான பேச்சுக்களினாலும் கூட பெண்ணிற்கு கிளர்ச்சியூட்ட முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.கிளர்ச்சி நிலையினால் மட்டுமே பெண்களால் முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியும். கிளர்ச்சி அடைதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது என்பது நம்பிக்கை. ஆனால் அது உண்மையில்லை. உறவைப் பொருத்தவரை இருவருக்குமே திருப்தி என்பது வேறுபடுகிறது. பெண்ணிற்கு எளிதில் திருப்தி கிடைப்பதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.


மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக்ஞைகளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல், மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென்றடைகின்றன. ஆனால் உடல் உணர்ச்சிகளே தேவையின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர்ச்சி என்பது தனியே மூளை மட்டும் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். அதிலும் சில சமயங்களில் பாலுணர்வை தூண்டும் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என்ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb