Knowledge Graph - கூகுளின் அடுத்த தலைமுறைக்கான தேடல் வசதி! (வீடியோ இணைப்பு)


கூகுள் தேடுபொறி என்றும் முதலிடத்தில் இருப்பதற்கு காரணம் அது எப்பொழுதும் தனது தேடல் முடிவுகளை மாற்றம் செய்துக் கொண்டே இருப்பது தான். தற்போது Knowledge Graph என்ற பெயரில் மேலும் ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது கூகிள்.பொதுவாக தேடல் பொறிகளில் நாம் ஏதாவது வார்த்தைகளை தேடினால் அந்த வார்த்தைகளை குறியீடுகளாக (Keywords) எடுத்துக் கொண்டு அது தொடர்பான இணையப் பக்கங்களை நமக்கு காட்டும். இந்த முறையினை தான் கூகிளும் பின்பற்றி வந்தது.


தற்போது Knowledge Graph என்ற பெயரில் தேடும் வார்த்தைகள் பற்றிய தகவல்களை தேடல் முடிவு பக்கத்தில் பக்கப்பட்டியில் (sidebar) காட்டப்போகிறது. உதாரணத்திற்கு Taj Mahal என்று தேடினால் இந்த இரண்டு வார்த்தைகளைக் கொண்ட இணையப் பக்கங்களை தேடல் முடிவில் காட்டும். இனி இவற்றுடன் சேர்த்து பக்கப்பட்டியலில் (Sidebar) Taj Mahal பற்றிய தகவல்களையும், அது தொடர்பான வேறு தேடல்களையும் காட்டும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb