நீங்கள் இங்கே பார்க்கும் பூவின் மணமானது இறந்து போன விலங்கு ஒன்றின் உடல் அழுகும் போது வரும் மணத்துக்கு ஒப்பாக இருக்குமாம். பூ இனங்களில் உள்ள பெரிய இன பூக்களில் இதுவும் ஒன்று ஆகும். Corpse flower, Amorphophallus titanum என்ற பெயர்களின் அழைக்கப்படும் இந்தப் பூ வருடத்துக்கு மூன்று முறை மட்டுமே பூக்கின்றது என்பது இதன் விசேட அம்சமாகும். ஜெர்மனியின் Kiel என்ற இடத்தில் உள்ள தாவரவியல் பூங்கா ஒன்றில் தான் மேற்படி பூவானது தற்போது மலர்ந்துள்ளது.
ஆனால் இந்தப் பூவைப் பார்க்கப் போகும் பார்வையாளர்கள் தான் பெரும் சவாலை எதிர்நோக்கப் போகின்றார்கள். மூன்று நாட்கள் மட்டுமே பூக்கும் வினோத பூ என்பதால் இதனைப் பார்க்க பார்வையாளர்கள் குறித்த பூங்காவில் பெருமளவில் கூடி வருகின்றார்கள்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து




