விமானங்களைத் தாக்க ரஷ்ய ஏவுகணைகளைப் பாவித்த விடுதலைப்புலிகள்!


 இலங்கையின் நட்பு நாடுகள் வரிசையில் முதன்மை நிலையில் இருக்கும் நாடுகள் என்றால், அது சீனாவும் ரஷ்யாவும் தான். ஆனால் இந் நாடுகளின் சில சிறப்பு ஆயுதங்களைத் தான் விடுதலைப் புலிகள் பாவித்தும் உள்ளனர் என்ற அதிர்சித் தகவல்கள் தற்போது வெளிப்பட்டுக்கொண்டு இருக்கிறது.


 சரணடைந்துள்ள பல போராளிகள் இன்னும் இரகசிய தடுப்பு முகாம்களில் இருப்பதும், அவர்களை இலங்கை இராணுவம் கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி அவர்களிடம் இருந்து தகவல்களைப் பெற்றுவருகிறது. ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொண்டே இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிக்கெப்டர் மற்றும் விமானம் ஒன்றின் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர் என்பது பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகச் செய்திகள் தற்போது,


 வெளிவந்துள்ளன. 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலகளினால் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாகவே லயன் எயர் விமானம் தாக்குதலுக்கு இலக்கானது. இந்தத் தாக்குதலுக்கு ரஷ்ய ஏவுகணையே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானம் மீது தாக்குதல் நடத்தியவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் 


அதேபோன்று 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி சுட்டு வீழத்தப்பட்ட இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோ விமானத் தாக்குதலுக்கும் ரஷ்ய ஏவுகணைகளே பாவிக்கப்பட்டன.


இந்த விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வேறு சில விமானங்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தமையும் விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


 இவர்கள் இருவரும் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் விமானம் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுதத்திய ஏவுகணையின் சிதைந்த பாகங்களும் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டன என்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.


கொண்டுசெல்லப்படக்கூடிய மற்றும் தரையில் இருந்து வானை நோக்கித் தாக்கக்கூடிய இந்த ரக ஏவுகணைகளை சாம்- 7 என்று அழைப்பது உண்டு.


2000ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளுக்கு கிடைக்கப்பெற்ற விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பல போலியானவை என அவற்றைப் பாவிக்கும்போதே புலிகள் உணர்ந்துகொண்டனர். போலியான விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அமெரிக்க உளவு நிறுவனம் புலிகளுக்கு வேண்டும் என்றே விற்றது என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் சில வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.




Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb