உலக அளவில் பல்வேறு வகையான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் தருணங்களில் நாய்க்குட்டி ஒன்று உலகின் மிகச்சிறிய நாய்க்குட்டி என்ற சாதனையை தனதாக்கியுள்ளது.
அதாவது Beyoncé என்ற இந்த நாயின் நீளம் நான்கு இஞ்சிகள் மட்டுமே ஆகும். இந்த நாய் பிறந்த போது அத்தனை ஒரு கரண்டியில் வைத்து தூக்கக் கூடியதாக இருந்ததாக இதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது 19 நாள் ஆன இந்த நாயை ஒரு ஐபோனில் வைக்கக் கூடியதாக உள்ளது. இந்த நாய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள El Dorado Hills என்ற இடத்தில் உள்ளது. குறித்த பொம்பிளை நாயின் வாய் சிறிதாக உள்ளதால் மணித்தியாலத்துக்கு ஒரு தடவை போச்சியில் பாலூட்ட சிரமமாக உள்ளதாக அதன் உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



