வெளிநாட்டு இணையத்தளங்களை குறி வைக்கும் சிறிலங்கா புலனாய்வுத்துறை!

வெளிநாடுகளில் இயங்கும் இணையத்தளங்களுக்கு தகவல்களை வழங்கும் செய்தியாளர்களின் விபரங்களைத் திரட்டுவதற்கான பொறுப்பு சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாந்த திசநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.இதற்கான உத்தரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஆவ நேரடியாக வழங்கியுள்ளார்.கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாந்த திசநாயக்க சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராவார்.

சில காலங்களுக்கு முன்னரே இவர், போர்த் தந்திரோபாயக் கற்கைநெறி ஒன்றை முடித்துக் கொண்டு சீனாவில் இருந்து திரும்பியிருந்தார்.அதேவேளை, அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் சந்திரா வாகிஸ்ராவிடமும் இணைய ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்களைத் தயாரித்து அறிக்கை ஒன்றைத் தயாரிக்கும் படி சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து இணையத் தளங்களுடன் தொடர்புடைய பெருமளவானோரின் விபரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.அரசாங்க அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட அதிகாரிகளாகப் பணியாற்றுவோரே இணையத் தளங்களுக்குத் தகவல்களை வழங்கி வருவதாக ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது என்று சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த விபரங்கள் அனைத்தும் சிறிலங்கா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb