இணையத்தில் பட்டையைக் கிளப்புகின்றது ஒபாமாவின் புதிய வீடியோ! (வீடியோ இணைப்பு)

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பாடிய 'Call Me Maybe' இசைப்பாடல் யூடியூப்பில் 8 மில்லியன் ஹிட்ஸ் கடந்து வலம் வரத் தொடங்கியுள்ளது. 2012 இன் சூப்பர் ஹிட்ஸ் கோடைவிடுமுறை பாடல் என புதிய பட்டமும் கொடுக்கிறார்கள். அமெரிக்க டென்னெஸே பல்கலைக்கழகத்தின் ஃபாடி சாலே (Fadi Saleh) எனும் மாணவன் தனது கடந்த வருட கோடைவிடுமுறையில் இந்த பாடலையும் மேலும் சில ஒபாமாவின் பாடல்களையும் உருவாக்கியுள்ளார்.அதாவது ஒபாமா பொது இடங்களில் நிகழ்த்தும் அரசியல் பேச்சுக்களின் சில சொற்களை மட்டும் பிரித்தெடுத்து, புத்திசாலித்தனமான எடிட்டிங் மூலம் ஒபாமாவே புதிய பாடல் பாடுவதாக அவர் வடிவமைத்துள்ளார். சாலேவின் Barackdubs எனும் யூடியூப் சேனலும் தற்போது மெகா பிரபலமடைந்துள்ளது.

பிரபல இசைப்பாடகர்கள் Rihana, Lady Gaga, Rae Jepson ஆகியோரின் ஆல்பங்களில் வெளிவந்த இசைப்பாடல்களை ஒபாமா பாடுவதாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அமெரிக்க வெள்ளை மாளை யூடியூப் சேனைலிருந்து ஒபாமா உரையாற்றும் அனைத்து காட்சிகளையும் எடுத்துள்ளார்.இது களிப்பூட்டுவதற்காக உருவாக்கப்பட்டதே தவிர, எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சி நோக்கத்திற்காகவும் இதனை செய்யவில்லை எனும் ஃபாடி சாலேஹ், இதே போன்று குடியரசு கட்சி தேர்தல் வேட்பாளர் மிட் ரூம்னியின் உரைகளை வைத்தும் உருவாக்க திட்டமிட்டிருக்கிறேன் என்கிறார்.



Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb