அபசகுனத்துடன் ஆரம்பித்த நந்தன புதுவருடம் - கலக்கத்தில் மஹிந்த!


மலர்ந்த இந்த சித்திரைப் புத்தாண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு அபசகுணமாக அமைந்ததாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இம்முறை சித்திரைப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஜனாதிபதியின் தங்காலை கால்டன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷ ”விருந்தோம்பல்” நேரத்தில் ஜனாதிபதிக்கு ஊண்டிய பாற்சோற்றில் ஒரு பகுதி கீழே விழுந்துள்ளது. இந்த சகுணம் அபசகுணமானது என சிரேஷ்ட ஜோதிடர்கள் சிலர் கூறியுள்ளனர்.


இந்தத் தருணத்தில் மன ரீதியாக குழப்பமடைந்த ஜனாதிபதி மகிந்த அவ்விடத்தைவிட்டு வெளியேறி, நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்த ரூபவாஹினி தொலைக்காட்சியின் ஒளிபரப்பையும் உடடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இதுகுறித்து கேட்டபோது தெரிவித்தார்.


அத்துடன், இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் புதல்வர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பதும் மகிந்த ராஜபக்‌ஷவிற்கு மனரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாமல், யோசித்த ராஜபக்‌ஷ ஆகிய இரண்டு புதல்வர்களும் இலங்கை ரக்பி அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதியின் பாரியார் ஊட்டிய பாற்சோற்றில் ஒரு பகுதி கீழே விழுந்தது மாத்திரமன்றி, புத்தாண்டு தினத்தில் கோட்டே ரஜமகா விகாரையில் பராமரிக்கப்பட்டு வந்த லங்கா என்ற யானை மின்னல் தாக்கத்தில் மரணித்தமையும் ஜனாதிபதிக்கு பெரும் மனத்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவமும் ஜனாதிபதி அபசகுணமானது என ஜோதிடர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, சாஸ்திர சம்பிரதாயங்கள், சடங்குகள், என்பவற்றில் பின்னிப்பிணைந்தவர் என்பது அனைவரும் அறிந்தவிடயமாகும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb