பெரும்பாலான பறவைகள் மரங்கள், கிளைகள் போன்றவற்றில் தான் கூடு கட்டும். ஆனால் நகரத்தில் வாழ்கின்ற இந்தப் பறவைக் குடும்பம் ஒன்று போக்குவரத்து சிக்னலில் கூடு கட்டி குஞ்சும் பொரித்து இருக்கின்றது.போக்குவரத்து சிக்னலை கடந்து போகும் போது பறவைகள் பறந்து செல்வதை முதலில் பார்த்ததாக Bury என்பவர் கூறியுள்ளார். அது பின்னர் தான் சிக்னலில் கூடு கட்டியிருந்த விடயம் தெரிய வந்ததாகக் கூறுகின்றார் அவர்.
சிக்னல் விளக்கின் வெளிச்சத்தில் குஞ்சுகள் அழகாக இருக்கின்றனவாம். எது எவ்வாறெனினும் மனிதன் மரங்களை அழிப்பதால் சிக்னல் விளக்குகளைத் தேடி ஓடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்ட பரிதாபப் பறவைக் குடும்பம் தான் இது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





