அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளிண்டன் கொண்டாட்டமொன்றில் கலந்துகொண்டபோது நடனமாடி மகிழ்ந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் சக்கை போடு போடுகின்றன.அண்மையில் கொலம்பிய விஜயம் மேற் கொண்டிருந்த அவர், அங்கு கடந்த சனி இரவு, சில பெண்களுடன் சேர்ந்து, பியர் குடித்து, நடனமாடி மகிழ்வது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதுடன் பெரும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளன.
அமெரிக்க அரசியலில் மிகவும் உறுதியும், கண்டிப்பும் நிறைந்த பெண்ணாகக் கருதப்படும் ஹிலரியின் இப்புகைப்படங்கள் குறித்து அமெரிக்க ஊடகங்களில் சிலாகிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க வெளியுறவுத் துறையின் முக்கிய பதவிகளில் ஒன்றில் இருக்கும் இவர் இவ்வாறன முறையில் பொது இடமொன்றில் நடந்துகொள்வது சரியா என ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
எது எவ்வாறு இருப்பினும் அவரும் ஒரு சாதாரண பெண்மணி என்பதுடன் இது அவரது தனிப்பட்ட சுதந்திரம் என்ற தரப்பிலும் ஒரு சாரார் வாதாடியும் வருகின்றனர். எனினும் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு கொலம்பிய சென்றிருந்த நிலையில், அவர் இவ்வாறு நடந்துகொள்வது நியாயமா என்ற வகையிலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கொலம்பிய வருகைக்கு முன்னதாக, கொலம்பியாவின் பொகோதா பகுதியில், அவரது வருகைக்கு எதிர்புத் தெரிவிக்கும் வகையில் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





