ஜப்பானைச் சேர்ந்த Ito என்பவர் நான்கு கால்களில் பாயும் குரங்கு போல் தனது கால்களாலும் கைகளாலும் மிக வேகமாக குரங்கு போல் பாய்ந்து ஓடுகின்றார். உலகிலேயே நான்கு கால் பாச்சலில் மிகவும் வேகமாக ஓடக் கூடியவர் என உலக சாதனை படைத்துள்ளார்.
சிறு வயதிலிருந்து தனது உடல் அமைப்பு ஒரு குரங்கின் அமைப்பு போல் இருப்பதாக கூறி தன்னை பாடசாலையில் குரங்கு குரங்கு என பரிகாசம் செய்ததாகவும், அத்தோடு தனக்கும் குரங்குகளின் செயற்பாடுகளில் ஒரு ஆர்வம் இருந்ததாகவும் 8 வருடங்களாக தான் குரங்கு போல் பாய்ந்து ஓடுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும் கூறுகின்றார்.குறையாக மற்றவர்கள் கேலி செய்த போதும் அதை ஒரு சாதனையாக மாற்றியிருக்கின்றார் Ito. பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே. குறைகளை நிறையாக்கி சாதிக்கும் திறனை இவரிடம் இருந்து அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம். வாழ்க்கை எனும் போராட்டத்தில் எமது பலவீனங்களையும் பலமாக்கும் வித்தையைக் கற்றுக் கொள்ளுங்கள் என்றுமே நீங்கள் வெற்றியாளர்கள்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து


