பரந்தன் பகுதியில் பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்ததாக மே-18 அன்று பரபரப்பான செய்திகள் வந்திருந்தது.சிறிலங்கா இராணுவத்தினரின் போர் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி வேட்டுச்சத்தங்களாக இருக்கலாம் எனவும் மறைந்திருந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்களிற்கும் இராணுவத்தினரிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலாக இருக்கலாம் எனவும் பல்வேறு கோணங்களில் காரணங்கள் கூறப்பட்டு வந்தது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்ற போது இடையிடையே பாரிய வெடியோசைகளும் கேட்டுள்ளன. இந்த சம்பவத்தில் சிறிலங்கா இராணுவத்திற்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதையடுத்து சம்பவ இடத்திற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க இலட்சினை பொறித்த வாகனம் மூன்று தடவை சென்று திரும்பியுள்ளது. இந்த வாகனப் போக்குவரத்தில் காயமடைந்த இறந்த இராணுவத்தினரை சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்த தகவல்கள் அனைத்தும் மிகவும் நம்பிக்கையான தொடர்புகள் மூலம் ஈழதேசம் இணையத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது. தேச விடுதலையின் மீது அக்கறை உள்ளவர்களாக இருப்பதால் இந்தச் சம்பவம் தொடர்பாக நாம் அறிந்த மேலதிக தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துள்ளோம். காலம் கனிந்து வரும் போது உண்மைகள் வெளிவரும்.
நன்றி ஈழதேசம்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



