ராய்ட்டர் செய்தித் ஸ்தாபனத்துக்காக அமெரிக்காவின் இப்சொஸ் பூகோள மக்கள் விவகார அமைப்பு நடத்திய உலக அழிவு சம்பந்தமான வாக்கெடுப்பில் அமெரிக்க மக்கள் தொகையில் 22% வீதமானோர் தமது ஆயுள் முடிவதற்குள் உலகம் அழிந்து விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் 10% வீதமான மக்கள் 2012 ஆம் ஆன்டு முடிவதற்குள் உலகம் அழிந்து விடும் எனக் கருதுகின்றனர். பிரான்ஸ் நாட்டில் வெறும் 6% வீதமான மக்களே உலகம் அழிந்து விடும் என்ற பயத்தில் உள்ள போதும் அமெரிக்காவில் ஒவ்வொரு 4 மனிதரில் ஒருவர் இது தமது ஆயுட்காலத்திலேயே நிகழ்ந்து விடும் என்ற பயத்தில் உள்ளனர்.
இதேவேளை இவ்வருடம் டிசம்பர் 21 இல் மாயன் கலெண்டர் முடிவடைவதாகவும் அதன் பின் உலகம் அழிந்து விடும் என்ற நம்பிக்கையும் இம்மக்களிடையே பரவலாக உள்ளது. மேலும் மக்களிடையே இவ்வச்சம் பரவுவதற்கு மீடியாக்களும் காரணமாக உள்ளன. இந்த நிலையில் மக்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதத்தில் இந்தக் கருத்துக் கணிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் சீனா, ரஷ்யா, துருக்கி, மெக்ஸிக்கோ, தென்னாபிரிக்கா,
ஜப்பான், அமெரிக்கா, ஆர்ஜென்டீனா, ஹங்கேரி, போலந்து, சுவீடன், பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம், கனடா, அவுஸ்திரேலியா, தென்கொரியா, இங்கிலாந்து, இந்தோனேசியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் பங்கேற்றிருந்தன.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



