தல என்று செல்லமாக அழைக்கப்படுகின்றவரும், தென்னிந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவருமான அஜித்தின் பில்லா-2 திரைப்படம் இரசிகர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்து டம்மி பில்லா என்கிற பெயரில் ஒரு மணித்தியால நகைச்சுவைப் படம் ஒன்று அடுத்த மாத நடுப் பகுதியில் வெளி வர உள்ளது.இதன் படப் பிடிப்பு வேலைகள் முற்றிலும் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டு நிறைவு பெற்று இருக்கின்றன. Young Guys Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில் இளம் கலைஞர் பஞ்சலிங்கம் ஹரிகரன் கதை, திரைக் கதை, எழுத்து, இயக்கம் ஆகியவற்றை மேற்கொண்டமையுடன் பில்லா பாத்திரத்திலும் நடித்து உள்ளார்.
இப்படத்தின் கதாநாயகன் பாத்திரமும் ஒரு பில்லாதான். கடத்தல்கார பில்லாதான். ஆனால் செருப்பு கடத்தல்காரன். இவர் எங்கெல்லாம் செருப்பு திருட வாய்ப்பு இருக்கின்றதோ அங்கெல்லாம் கை வரிசையை காட்டி விடுவார். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பொலிஸார் இந்த பில்லாவை பிடிக்க எத்தனையோ வியூகங்களை வகித்து அதிரடி நடவடிக்கைகளை தொடுத்து விடுகின்றனர். மிகுதியை திரையில் கண்டு கொள்ளுங்கள். தற்போது இந்நகைச்சுவை படத்தின் டீஸர் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து