இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 67 வயதான ஒருவர், நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் காரணமாக, அவரால் பேசவோ, எழுதவோ முடியாது. அவருக்கு குழாய் மூலமாகவே உணவும், தண்ணீரும் கொடுக்கப்பட்டு வருகிறது.மேலும், செயற்கை சுவாச கருவியும் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், குடும்பத்துக்கு பாரமாக இருப்பதை விரும்பாத அவர், தான் மரணம் அடைவதற்கு அனுமதி வழங்கக்கோரி, கோர்ட்டை அணுகினார்.
ஒரு மருத்துவர், சமூக சேவகர் ஆகியோரின் முன்னிலையில், அவருடைய மனைவியின் ஒப்புதலுடன் இம்மனு தயாரிக்கப்பட்டது. இம்மனுவை விசாரித்த பெண் நீதிபதி தீய்ஸ், அந்த மனிதர் அமைதியான முறையில் இறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதற்காக, அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து வரும் கருவியை துண்டித்து விட்டு, அவர் மரணம் அடைய வழிவகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இங்கிலாந்தில், கடந்த 1993-ம் ஆண்டிலேயே டோனி பிளாண்ட் என்பவர் மரணம் அடைவதற்கு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



