தென்னாசியாவையே கதிகலங்க வைத்த புலிகளின் ஏவுகணை! (படங்கள் இணைப்பு)


ரோப்பிடோ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் தாமே வடிவமைத்து இயக்கி வந்ததாக இந்தோனேசிய ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. ஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளே கடலுக்கு அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத் தாக்கக்கூடிய ரோப்பிடோக்களைத் தயாரிப்பதில் வல்லவர்கள். தொழில் நுற்பத்தில் பன்மடங்கு வளர்சியடைந்திருக்கும் இந் நாடுகளுக்கு இணையாக விடுதலைப் புலிகள் உள்ளூர் பொருட்களைப் பாவித்து இவ்வகையான நீர்மூழ்கி ஏவுகணைகளைத் தயாரித்துள்ளனர் என அது மேலும் கருத்துத் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ் என்று சொல்லப்படும், படு பயங்கரமான வெடி மருந்துகளை இவர்கள் இந்த ஏவுகணைகளில் பொருத்தியுள்ளனர்.


குறிப்பாகச் சொல்லப்போனால், இவ்வகையான ஏவுகணையின் தாக்குதலில் சிக்கும் எந்தக் கப்பலும் சுக்கு நூறாகிவிடும். விடுதலைப் புலிகள், ஆரம்ப காலத்தில் தற்கொலைப் படகுகள் மூலமே இலங்கை கடற்படையினரைத் தாக்கி வந்தனர். 2002ம் ஆண்டுக்குப் பின்னரே இவர்கள் நீர்மூழ்கி ஏவுகணகளைச் செய்ய கற்றுகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகள் உற்பத்திசெய்யும் நீர்மூழ்கி ஏவுகணைகள், தமது இலக்கை அறிந்து, அதனை துரத்திச் சென்று தாக்க வல்லது. அதுபோல இல்லை என்றாலும், எதிரியின் கப்பலை நோக்கி ஏவுகணையை தரையில் இருந்தே கட்டுப்படுத்தக்கூடிய தொழில் நுற்பத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர் எனவும் அறியப்படுகிறது.


தமது வசதிகளுக்கு ஏற்ப, ரிமோட் கன்றோலர் மூலம் இயக்கக்கூடிய நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் துல்லியமாக தயாரித்துவைத்திருந்துள்ளனர். இலங்கை இராணும் புலிகளின் கடற்படை முகாம் ஒன்றை 2009ம் ஆண்டு அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலம் திடீரெனக் கைப்பற்றியது. அங்கே காணப்பட்ட, நீர்மூழ்கி ஏவுகணைப் பார்த்து இராணுவம் அதிர்ந்துபோயுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. தெற்காசியாவில் இவ்வகையான பாரிய சக்திகொண்ட நீர்மூழ்கி ஏவுகணைகளைக் கொண்ட ஒரே இயக்கம், புலிகளாகத்தான் இருக்கவேண்டும் என இந்தோனேசிய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது இலங்கை அரசானது, தனக்குத் தேவையான துப்பாக்கி ரவைகளைக்கூட பிற நாடுகளிடம் இருந்தே தருவித்துவரும் நிலையில், விடுதலைப் புலிகள் இதுபோன்ற கனரக ஆயுதங்களை மிக இலகுவாக உற்பத்திசெய்யக் கற்றுக்கொண்டனர் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்க விடையமாகும்.





நன்றி அதிர்வு.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb