அன்னையர்களுக்கு பரிசளிக்கும் முகமாக உருவாக்கப்பட்டுள்ள இன்னிசைப் பாடல்! (வீடியோ)


சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு மலேசிய தமிழ் இசைக் கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள வீடியோ இசைப்பாடல் இது.உலகின் அனைத்து அன்னையர்களுக்கும் இப்பாடலை எமது அன்பு பரிசாக சமர்ப்பிக்கிறோம் என்கிறார்கள் இக்கலைஞர்கள்.


Michael Rao வின் இசையில், பாடகர்கள் Michael Rao, Michael Rao II,  Ganesan Manohgaran, Shashtan Kurup, Shamini Ramasamy, MC Dv, Suren Seven Alex Rao ஆகியோர் இப்பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.  Mani பாடல் வரிகளை எழுதியுள்ளார். Geethanjili G இன் தயாரிப்பில், Wicknewswaren Kalaiperumal இப்பாடலை இயக்கியுள்ளார்.இயற்கை பேரழிவுகளில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்காக நிதி திரட்டுவதற்காகவோ, மொழி, இனம் அல்லது லாப ரீதியான ஒரு கொண்ட்டாட்ட நிகழ்வுக்காகவோ பொதுவாக உருவாக்கப்படும் வீடியோ இசைப்பாடல்களுக்கு மத்தியில், அன்னையர் தினத்தை முன்னிட்டு தமிழில் வாழ்த்திப்பாடியுள்ள இம் மலேசிய கலைஞர்களின் முயற்சியை நன்றியுடன் வரவேற்கிறார்கள் சமூக வலைப்பதிவாளர்கள்.தராமன பாடல் வரிகள், ஈர்க்கும் குரலிசை, வித்தியாசமான காட்சி, நேர்த்தியான அமைப்பு என உருவாக்கப்பட்டுள்ள இவ் வீடியோ இசை பாடலை, நீங்களும் உங்கள் அன்னையருக்கு அன்னையர் தின பரிசாக சமர்ப்பிக்கலாம்!


எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 13) இலங்கை, இந்தியா, மலேசியா, சீனா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. வழமையாக வருடந்தோறும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் வருகிறது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb