பாலிவுட்டின் கவர்ச்சி சூறாவளி யானா குப்தா, மேக்ஸிம் ஆங்கில இதழுக்கு முழு நீள கவர்ச்சி காட்டி கொடுத்துள்ள போஸ்கள் பாலிவுட்டில் சூட்டைக் கிளப்பியுள்ளன. கவர்ச்சி காட்டி மட்டுமே நடிப்பது என்ற பாலிசியுடன் பாலிவுட்டைக் கலக்கி வருபவர் யானா குப்தா. பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் தனது கவர்ச்சியின் வீச்சைக்காட்டி விட்டு இளம் உள்ளங்களை இம்சித்து விட்டுப் போனவர். நடிக்கிறாரோ இல்லையோ, கவர்ச்சியில் எந்தக் குறையும் வைப்பதில்லை யானா குப்தா. இதனாலேயே அவரை வைத்து படம் எடுப்பவர்கள் கவர்ச்சி பற்றிக் கவலைப்படுவதே இல்லை. வாங்கிய டப்புக்கு டபுள் மடங்காக கவர்ச்சியில் கலக்குபவர் யானா. இப்போது மேக்ஸிம் ஆங்கில இதழுக்கு முழு நீள கவர்ச்சி காட்டி அவர் கொடுத்துள்ள போஸ்கள் பாலிவுட்டில் பட்டையைக் கிளப்பியுள்ளன. படு சூடான அந்த போஸ்களால் மேக்ஸிம் இதழுக்கே புதுக் கவர்ச்சி வந்து விட்டது என்கிறார்கள் பாலிவுட்டில். இந்தியாவின் பிளேபாய் என்ற ரேஞ்சுக்குப் போய்க் கொண்டிருக்கும் மேக்ஸிம் இதழ் தனது முதல் இதழில் குஷ்புவை குண்டக்க மண்டக்க போஸில் பிரசுரித்து வாங்கிக் கொண்டது என்பது நினைவிருக்கலாம். ஆனாலும் தனது கவர்ச்சி சேவையில் கொஞ்சமும் தொய்வில்லாமல் ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது மேக்ஸிம். லேட்டஸ்டாக வெளியாகியுள்ள யானாவின் விஸ்வரூப ஸ்டில்கள்தான் இப்போது பாலிவுட்டின் சூடான பேச்சாக உள்ளது. யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன். அதேபோல யானா எப்படி போஸ் கொடுத்தாலும் அது கவர்ச்சிதான்.இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





