பேஸ்புக்கில் அறிமுகமாகிய பெண்ணை நிர்வாண நிலையில் படம்பிடித்தவர் மீது வழக்கு!
பேஸ் புக் மூலம் ஆசிரியை ஒருவருடன் நட்பாகி, அவரை விடுதியில் சந்தித்து நிர்வாண புகைப்படங்களை பிடித்த பின்னர் அப்புகைப்படங்களை இணையத்தளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி பாலியல் உறவு கொண்டதாக கூறப்படும் நபருக்கு எதிரான வழக்கை ஓகஸ்ட் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய இந்நபருடனான நட்பு, காதலாக மாறியதாகவும் செல்லிடத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட இருவரும் பம்பலப்பிட்டியிலுள்ள ஹோட்டலொன்றில் கடந்த வருடம் செப்டெம்பர் 17 ஆம் திகதி சந்தித்தாகவும் மேற்படி ஆசிரியை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் தெரிவித்துள்ளார்.
தன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்த அந்நபர், தன்னை நிர்வாணமாக படம்பிடித்தாகவும் மேற்படி ஆசிரியை தெரிவித்துள்ளார். அதன்பின் தன்னை அச்சுறுத்திய அந்நபருக்கு ஒரு தடவை 7000 ரூபாவும் மற்றொரு தடவை 4000 ரூபாவும் வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இம்முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்திய கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். தான் நிரபராதி என சந்தேக நபர் கூறினார். இது தொடர்பான வழக்கை ஓகஸ்ட் 3 ஆம் திகதிக்கு நீதவான் கனிஷ்க விஜேரட்ன ஒத்திவைத்தார்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



