மாவோ தீவிரவாதிகள் விடுதலைப்புலிகளின் தந்துரோபாயங்களையே பின்பற்றுகின்றனர்!
மாவோ தீவிரவாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திரோபாயங்களை பயன்படுத்தி வருவதாக Deccan Chronicle ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய யுத்தத்தின்போது பெண்களைப் பயன்படுத்தி தாக்குதல் வியூகம் அமைத்ததாகவும் அதே வழிமுறையை தற்போது மாவோ தீவிரவாதிகளும் பின்பற்றி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
பெண்களை பயன்படுத்தி படையினரின் கவனத்தைத் திசை திருப்பி அண்மைக்காலமாக மாவோ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
அண்மையில் சட்டிஸ்காரில் மாவோ தீவிராவதிகள் காட்டுப் பகுதியில் பெண்களை அழ விட்டு, அந்தக் குரலைக் கேட்டு வந்த காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.மற்றுமொரு சந்தர்ப்பத்தில் நிராயுதபாணியான பெண்களை நாடு காட்டில் நடக்கவிட்டு, படையினரின் முழுக் கவனத்தையும் பெண்களின் பால் ஈர்க்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.இவ்வாறான தாக்குதல் வியூகங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியிருந்ததாக Deccan Chronicle ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



