ஜேம்ஸ் கெமரூனின் ஆழ்கடல் அனுபவம்! (வீடியோ இணைப்பு)


ஆஸ்கார் இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் தனது ஆழ்கடல் சாகச பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பியுள்ளதுடன், இன்னுமொரு புதிய கிரகத்திற்கு சென்று வந்த உணர்வு ஏற்பட்டுள்ளதாக தனது அனுபவத்தை விவரித்துள்ளார்.


பூமியின் மையத்திற்கு செல்லும் முயற்சி அது என்ற வர்ணனையுடன் உலகின் மிக ஆழமான கடல் பகுதிக்குள், பிரத்தியேக நீர்மூழ்கி கப்பலில் நேற்று முன் தினம் சென்று திரும்பியிருந்தார் ஜேம்ஸ் கெமரூன். எவெரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட அதிகமாக, சுமார் 10,900 மீற்றர் ஆழத்தை கொண்ட கடற்பகுதி (Mariana Trench) பசுபிக் சமுத்திரத்தில் ஜப்பானுக்கு அருகில் உள்ளது.
இதுவரை இருவர் மாத்திரமே இதனூடாக முடிந்தளவு கடல் ஆளத்திற்கு சென்று திரும்பியிருந்தனர். இந்நிலையில் உலகின் மையப்பகுதிக்கு செல்ல வேண்டும் என்பது எனது சிறிய வயது கனவு என கூறிவந்த ஜேம்ஸ் கெமரூன், தனது குழுவினருடன் இனைந்து உருவாக்கிய நீர்மூழ்கி கப்பலை கொண்டு இக்கடல் பகுதியில் அக்கனவை தற்போது சாத்தியமாக்கியுள்ளார்.


 சுமார் 8 வருட காலமாக ஆஸ்திரேலியாவில் அவ்வப்போது முகாமிட்டு, இப்பயணத்தை பற்றி விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டிருந்தார் கெமரூன். இறுதியில் அவர் மட்டும் செல்லக்கூடியவகையில் அக்கப்பல் உருவாக்கப்பட்டது. பல ஒத்திகை முயற்சிகளின் பின்னர், இச்சாகச பயணத்தை ஆரம்பித்தார். ஆழத்தை தொட்டு மீண்டும் மேல் கடல் பகுதிக்கு திரும்பிய பின்னர் அனுபவத்தை இப்படி விவரிக்கிறார். 'இது முற்றிலும் ஒரு வேற்றுக்கிரக அனுபவம், நாம் கனவு காண்பது போன்று மிக பாரிய கடல் வாழ் உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சி இங்கு நடைபெறுவதாக எனக்கு தென்படவில்லை. இந்த ஆழமான கடல் பரப்பில் நான் பார்வையுற்ற சிலவகை மீன்கள், திமிங்களுக்கு கண்கள் இருப்பதாக தெரிவதில்லை. பெரும்பாலானவை தூய வெள்ளை நிறத்தில் இருந்தன.  ஆனால் அவற்றை முன்னர் பார்த்ததில்லை. அவை இந்த அபூர்வமான சூழலை தழுவி வாழ்கின்றன. சூரிய வெளிச்சமோ, வெப்பமோ இந்த ஆழ்கடலுக்குள் ஊடுருவவில்லை. காரிருளும் கடும் குளிரும் எங்கும் சூழ்ந்திருந்தது.'


இச்சாகச பயணத்தை கெமரூன் முடித்து திரும்புவதற்கு 7 மணி நேரம் தேவைப்பட்டுள்ளது. 'இந்த பயணம் ஒரு தொடக்கம் மட்டுமே' என கூறும் கெமரூன், கடல் கோள் அனர்த்தங்கள் ஏன் ஏற்படுகின்றன என்பது முதலில் பூமியின் மையப்புள்ளி வரையிலான பல ஆய்வுகளுக்கு இப்பயணம் நிச்சயம் பல பாதைகளை திறந்துவிடும் என்கிறார். இப்பயணத்தை தொடங்கியது முதல் ஆழமான பகுதிக்கு சென்றடைந்தது வரை அனைத்தையும் டுவிட்டரிரும் அவர் பதிவு செய்துள்ளார்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb