அமெரிக்காவில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த 76 வயது பாட்டி, கட்டுப்பாட்டை இழந்து சூப்பர் மார்க்கெட்டுக்குள் மோதி விட்டார்.இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் தெல்மா வேகன்ஹோப்பர்(76) கடந்த சனிக்கிழமை தனது காரை ஓட்டி வந்தார்.
புளோரிடாவின் பால்ம் கோஸ்ட் பகுதியில் அதிவேகமாக காரை ஓட்டினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து கார் தாறு மாறாக ஓடத் தொடங்கியது. பாட்டியினால் காரை நிறுத்த முடியவில்லை.
அதற்குள் சாலையோரம் இருந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் கார் புகுந்தது. அங்கிருந்த கண்ணாடிகள், பொருட்கள் நொறுங்கியதில் பயங்கர சத்தம் ஏற்பட்டது. மார்க்கெட்டில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், அதிவேகமாக வந்ததால் சூப்பர் மார்க்கெட்டுக்குள் 40 அடிக்கு உள்ளே கார் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிரிழக்கவில்லை. எனினும் காயம் அடைந்தவர்களில் ஒருவர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றனர்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து




