அந்த நேரத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் வினோத பழக்கங்கள்!

வண்டி வேகமாகப் போய்க் கொண்டிருக்கும்போது திடீரென ஸ்பீட் பிரேக்கர் குறுக்கிட்டால் எவ்வளவு டென்ஷனாக இருக்கும்.அதுபோலத்தான் செக்ஸ் உறவில் மும்முரமாக இருக்கும்போது ஏதாவது ஒரு இடையூறு வந்து மூட் அவுட் ஆக்கி விடும். இது பலருக்கும் பல சந்தர்ப்பங்களில் நடந்திருக்கும்.சிறப்பாக தொடங்கி, சீராக தொடர்ந்து, வேகமெடுத்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து ஏற்படும் இதுபோன்ற குறுக்கீடுகளால் உறவு கசந்து போகும் வாய்ப்புள்ளது. 


நல்ல மூடுடன் உறவில் மும்முரமாக இருப்பீர்கள். அந்த நேரம் பார்த்து சிலருக்கு 'டொம்' என்று 'வெடி' வெடிக்கும். இந்த 'கேஸ் லீக்', பார்ட்னரை முகம் சுளிக்க வைக்கும். சிலருக்கு திடீரென சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருக்கும். சிலர் மோகத்தில் மனைவி பெயரைச் சொல்வதற்குப் பதில் தங்களது முன்னாள் தோழி அல்லது பிடித்த பெண்ணின் பெயரைச் சொல்லி மாட்டிக் கொள்வார்கள்.இப்படி ஏகப்பட் அசவுகரியங்களை நாம் தினசரி செக்ஸ் வாழ்க்கையில் சந்திக்க நேரிடுகிறது. இதை எப்படித் தவிர்க்கலாம்?.உடலுறவு தொடர்பான வேலைகளில் மும்முரமாக இருக்கும்போது சிறுநீர் வரும் பிரச்சினை பலருக்கும் உண்டு. இருப்பதிலேயே பெரிய குழப்பம் இதுதான். சிறுநீர் வருவது போல உணர்வு வந்தால் அவர்களுக்கு விந்தணு வெளியாவதில் சிக்கல் வரும். அதேபோல பெண்களுக்கு சிறுநீர் வருவதாக இருந்தால், ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை அடைவதில் சிக்கல் ஏற்படும்.


செக்ஸ் உணர்வு தூண்டுதலின்போது சிறுநீரக பை அதிக அளவில் அழுத்தப்பட்டால் அவர்களுக்கு சிறுநீர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இது பெரும்பாலும் பெண்களுக்குத்தான் ஏற்படுமாம். இருப்பினும் சில நேரம் ஆண்களுக்கும் வரும்.இதுபோன்ற சூழல் ஏற்படும் போது இருவருக்குமே மூட் அவுட் ஆகி விடும் வாய்ப்புள்ளது. வேகம் குறைந்து, மந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவர்.இதைத் தவிர்க்க உறவின்போது அதிக அளவில் அழுத்தம் தருவதைத் தவிர்க்கலாம். மேலும், செக்ஸ் உறவுக்கு முன்பாகவே பாத்ரூம் போய் விட்டு சமர்த்தாக வருவது மிகவும் அவசியம்.அடுத்தது 'கேஸ்' டிரபுள். இந்த சுத்தமாக மூடை கொன்று விடும் தன்மை கொண்டது. முன் விளையாட்டுக்களில் ஈடுபட்டிருக்கும்போது சிலருக்கு காற்று பிரிந்து உறவை நாறடித்து விடும். சிலருக்கு அதற்கு மேல் மூடே இருக்காது உறவைத் தொடர. இதைத் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள். காரணம், செக்ஸ் உறவு என்பது மணம் வீசும் உறவு, அப்படிப்பட்ட சமயத்தில் இதுபோன்ற காற்றுப் பிரச்சினையால் உறவு கசக்கும் வாய்ப்புள்ளாக அவர்கள் சொல்கிறார்கள்.


இதைத் தவிர்க்க வயிற்றில் கண்டதையும் போட்டு அடைப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உருளைக் கிழங்கு, தானிய வகைகள், பேக்கரி வகையறாக்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிடக் கூடாது. இவை வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தி கேஸ் டிரபுளை ஏற்படுத்தும். மேலும், சாப்பிட்டு முடித்த பின்னர் நன்கு நடந்து விட்டு வருவது அதை விட முக்கியமானது. சாப்பிட்ட சாப்பாடு நன்கு ஜீரணமான பின்னர் படுக்கைக்குள் புகுவது இன்னும் உத்தமம்.


இப்படி செக்ஸ் உறவை குழப்பும், இடையூறு செய்யும் விஷயங்களைத் தவிர்ப்பதன் மூலம் செக்ஸ் உறவை முழுமையாக, அழகாக, திருப்தியாக அனுபவிக்க முடியும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb