உலகப் பணக்காரர்களில் முன்னிலையில் இருப்பவர்களைப் பார்த்தால் அமெரிக்காவுக்கு முதலாவது இடம் ஆண் பெண் இரு பிரிவுகளிலுமே இல்லாமல் போயிருப்பது அதிர்ச்சியான தகவல். இதற்கு முன் ஆண்களில் நம்பர் 1 பணக்காரராக அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாஃப்ட் கம்பெனியின் தலைவர் பில்கேட்ஸ் பல வருடங்களாக அசைக்க முடியாமல் இருந்தார். ஆனால் இவ்வருடம் இவரைப் பின்னுக்குத் தள்ளி மெக்ஸிக்கோவைச் சேர்ந்த தொழிலதிபரான கார்லோஸ் ஸ்லிம் முதலிடத்தை பிடித்துக் கொண்டார்.இத்தகவலை வழங்கிய அவுஸ்திரேலியாவின் BRW பத்திரிகை, கினா ரினேஹார்ட் எனும் அவுஸ்திரேலிய சுரங்க அதிபர் பெண்கள் பிரிவில் இவ்வாண்டுக்கான உலகின் நம்பர் 1 பணக்காரியாக தெரிவாகியுள்ளதாகக் கூறியுள்ளது. இதற்கு முன் 7 வருடங்களாக நம்பர் 1 இடத்திலிருந்த கிரிஸ்டி வால்டோனிடமிருந்து முதலாமிடத்தை இவர் பறித்துக் கொண்டுள்ளார்.ரினேஹார்ட்டின் சொத்து மதிப்பு 29.7 பில்லியன் டாலர்களாகும். 2 ஆம் இடத்திலுள்ள வால்டோனின் சொத்து மதிப்பு 26 பில்லியன் டாலர்களாகும். இதில் முதலிடம் வகிக்கும் ரினேஹார்ட் ஒவ்வொரு அரை மணித்தியாலத்திற்கு, பெறும் ஊதியம் 1 மில்லியன் டாலர்கள், ஒவ்வொரு செக்கனுக்கும் சம்பாதிக்கும் தொகை 600 டாலர்கள்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து




