எட்டு மாத பெண் குழந்தை ஒன்றை மலேசிய தாய் ஒருவர் அடித்து கொடுமைப் படுத்துகின்றமையை காட்டுகின்ற வீடியோ ஒன்று சமூக இணைப்பு தளங்களில் நேற்று மாலை வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இப்பெண் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று மலேசியர்கள் உரக்க குரல் கொடுக்கலாயினர். இப்பெண்ணை கைது செய்ய சொல்லி 300 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் ரோயல் மலேசிய பொலிஸாருக்கு கிடைத்து உள்ளன.
ஆனால் இவ்வீடியோ பழையது என்பதையும் கொடுமைக்கார பெண் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார் என்பதையும் பொலிஸார் உடனடியாக கண்டுபிடித்து உள்ளார்கள்.
Petaling Jaya என்கிற இடத்தில் கடந்த வருடம் மே 29 ஆம் திகதி குழந்தை கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கின்றது. அன்றைய தினமே பெண்ணும் உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்கின்றார். கைது செய்யப்பட்ட பெண் கடந்த 18 மாத காலமாக சிறையில் உள்ளார். குழந்தை சமூக நல திணைக்களத்தின் பாதுகாப்பில் உள்ளது. வீடியோ எடுத்தவர் இது சம்பந்தப்பட்ட வழக்கில் பொலிஸ் தரப்பு சாட்சியாக உள்ளார்.
வீடியோ நான்கு நிமிடங்கள் வரையான காட்சியைத்தான் கொண்டது. கட்டிலில் அமர்ந்து இருக்கின்ற பெண் தலையணையாலும், கையாலும், காலாலும் குழந்தையை தொடர்ச்சியாக நைய புடைக்கின்றமையை இது காட்டுகின்றது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



