தாம்பத்திய உறவின்போது நல்லதை நினைத்தால் நல்ல குழந்தை பிறக்கும்!


புதிதாக திருமணமான தம்பதியர் முதன் முதலாக தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது நல்ல, நேர்மறையான எண்ணங்களை மனதில் நினைக்க வேண்டும் என்று காமசூத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பொழுதுதான் ஆரோக்கியமான, புத்திசாலியான குழந்தைகள் பிறக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.தாம்பத்ய உறவில் இணையும் தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்வதில் அனுசரிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. படுக்கை அறைக்குள் செல்லும் முன்பாக பெரியோர்களை மதித்து அவர்களிடம் நல்வாக்குப் பெற வேண்டும். உறவில் ஈடுபடும் வேளையில் ஆண், பெண்ணின் மனதில் நல்ல சிந்தனைகளே ஓட வேண்டும்.


பெண், மனம் லயிக்கும் இசைகளைக் கேட்க வேண்டும். ஆன்மீக சிந்தனை வேண்டும். பிறர்க்கு உதவிடும் எண்ணம் வேண்டும். அறிவுக்கு விருந்தாகும் சிறந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்து வந்தால் தான், கருவில் உருவாகும் குழந்தை, அதே போல, நல்ல திறமைசாலியாக, பிறர்க்கு பயன் உள்ளவனாக, சாதனையாளனாக வர முடியும் என்கிறது காமசூத்திரம்.



  • பரிசுத்தமான உணவு



தாம்பத்ய உறவில் ஈடுபடும் கணவனது விந்து பரிசுத்தமானதாக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம். இதற்காக அவன் தனது உணவு முறையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பச்சைக்காய்கறிகள், இளநீர், பழ வகைகள் போன்ற இயற்கை உணவுப் பொருட்களையே உட்கொள்ளவேண்டும்.செயற்கை உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். அப்போது தான் விந்து பரிசுத்தமாக, வீரியம் மிக்கதாக இருக்கும். இப்படிப்பட்ட விந்தினால் தான், உடனே கருப்பிடிக்க ஏதுவாகும். அல்லது வீரியமற்ற விந்து உருவாகி, அதனால் கருத்தரிப்பில் தாமதம் ஏற்படலாம்.


எப்படி பாலைக் காய்ச்சி, சிறிதளவு தயிரில் ஊற்றினால், அது எல்லாம் தயிராகிறதோ, அது போல, நல்ல விந்தானது, கருப்பையில் சென்ற உடனே, அங்குள்ள கரு முட்டையோடு இணைந்து கருத்தரித்தல் நடக்கிறது.



  • ஆணா? பெண்ணா?



உறவின் போது விந்தணுக்கள் அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தையாகவும், பெண்ணின் சுரோநிதம் என்ற பொருள் அதிகமாக இருந்தால் அது பெண் குழந்தையாகவும் ஜனிப்பதாக, காமசூத்திரம் சொல்கிறது. ஆணின் விந்தணுச் சுரப்பிலும், பெண்ணின் சுரோனிதச் சுரப்பிலும் ஏற்றத்தாழ்வுகள் நிகழலாம். ஆனால் இரண்டுமே சம அளவில் நிகழ்ந்தால், ஒன்றை ஒன்று டாமினேட் செய்ய முடியாமல், இறுதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட அரவாணியாக குழந்தை உருவாகிறது.


எனவே உறவில் ஈடுபடுவது உடல் மகிழ்ச்சிக்காக மட்டுமல்ல அது ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கவும்தான் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். எனவே நல்ல சிந்தனையோடு நேர்மறை எண்ணத்தோடு அணுகுங்கள் நல்ல குழந்தைகளை உருவாக்கலாம்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb