கொலைவெறியைத் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான கங்குலியின் சாதனை! (வீடியோ)

கங்குலியின் சாதனைகள் தொடர்பான வீடியோவை இன்டர்நெட்டில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இதன் ஹிட் ரேட் கொல வெறிப் பாடலை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக விளங்கியவர் கங்குலி. கடந்த 2008ல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த இவரை, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்று மூன்று ஆண்டுகளுக்கு விளம்பர தூதுவராக ஒப்பந்தம் செய்துள்ளது.


இந்த நிறுவனம், சவுரவ் கங்குலி - தி மூவி என்ற பெயரில் ஒரு குறும்படம் தயாரிக்க முடிவு செய்தது. இதில் கங்குலியின் வாழ்க்கை, தலைமை பண்பு, சாதனைகள், கிரிக்கெட்டில் சந்தித்த ஏற்ற, தாழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு சுவையான தகவல்கள் இடம் பெற உள்ளன. இதற்கான மூன்று நிமிடங்கள் கொண்ட டிரைலர் சமீபத்தில் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டது.பாலிவுட் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இந்த வீடியோவை கண்டு ரசித்துள்ளனர்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb