நாளொன்றிற்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்!


பெண்கள் தங்கள் அழகை சரி செய்து கொள்ள, ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு முறை கண்ணாடி பார்ப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.


பெண்களுக்கு அழகுணர்வு அதிகம். இதனால் தான், பெண்களின் அலங்காரப் பொருட்களை மையப்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் லாபம் சம்பாதித்து வருகின்றன. லண்டனைச் சேர்ந்த, சிம்பிள் ஸ்கின் கேர் என்ற நிறுவனம், 2,000க்கும் அதிகமான பெண்களிடம் ஒரு ஆய்வை நடத்தியது.


இந்த ஆய்வின்படி, ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பெண்கள் எட்டு முறை கண்ணாடி முன் நின்று, தங்கள் அலங்காரத்தை சரி செய்து கொள்கின்றனர். கார் கண்ணாடி, கடைகளில் வைக்கப்பட்டுள்ள நிலை கண்ணாடி, குளிர்ச்சி கண்ணாடி என, பல கண்ணாடிகளில் இவர்கள் தங்கள் அலங்காரங்களை சரி செய்து கொள்வதாக தெரியவந்துள்ளது.


ஒரு காரை கடந்து செல்லும் போது, அதில் உள்ள கண்ணாடியில் குனிந்து பார்த்து தங்கள் அலங்காரத்தை சரிபார்த்துக் கொள்வதாக 10 பேரில் ஒரு பெண் ஒப்புக்கொள்கிறார். குளியலறை கண்ணாடியில் தாங்கள் அழகாகத் தெரிய வேண்டும் என, மூன்றில் ஒரு பெண்கள் கண்டிப்பாக எதிர்பார்க்கின்றனர் என, இந்த ஆய்வு தெரிவிக்கிறது.


மான்செஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர் கிறிஸ்டின் பன்டி குறிப்பிடுகையில், பெண்கள் என்ன தான் வேலையாக இருந்தாலும், தன்னுடைய தோற்றப் பொலிவு நன்றாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். தோற்றப் பொலிவு நன்றாக உள்ள பட்சத்தில் அவர்களுடைய நம்பிக்கையும் அதிகரிக்கிறது என்றார்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb